தமிழில் பூர்ணா. மலையாளத்தில் ஷாம்னா காசிம். தொழில் :நடிப்பு. இன்னும் மணமாலை சூட்டவில்லை. மணாளனுக்காக வெயிட்டிங்.
கனமான பார்ட்டி. கல்யாணம் பண்ணிக்கொண்டால் சொகுசு வாழ்க்கை என்று கணக்குப்போட்டு சிலர் காய் நகர்த்தியிருக்கிறார்கள் .அதில் ரபீக் என்பவர் முக்கியமான ஆள்.இவருக்குத்தான் பூர்ணாவை பெண் கேட்டிருக்கிறார்கள்.
வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறவர்க்கு சீட் கன்பார்ம் என்றால் எத்தகைய மகிழ்ச்சி தவழுமோ ,கிறங்கி விட்டார் பூர்ணா. ஆனால் துபாய் பார்ட்டி டுபாக்கூர் என்பது பின்னர்தான் தெரிந்திருக்கிறது. கல்யாணம் பேச வந்த பார்ட்டி கள்ளக்கடத்தல் பார்ட்டி என்பது போலீசுக்குப் போன பிறகுதான் நடிகைக்கு தெரிந்திருக்கிறது. பிளாக் மெயில் பண்ணியிருக்கிறார்கள். மிரட்டி இருக்கிறார்கள்.1லட்சம் ரூபாய் கேட்டிருக்கிறார்கள்.
சரி பூர்ணாவின் பெர்சனல் போன் நம்பர் கடத்தல் பேர்வழிகளுக்கு எப்படி கிடைத்தது ,யார் கொடுத்தது? கேரளப்போலிஸ் ஆயிற்றே.! கண்டு பிடிக்காமல் விடுவார்களா? சினிமாத்துறையை சேர்ந்த சிலருடன் கள்ளக்கடத்தல் பார்ட்டிக்கு தொடர்பு இருந்திருக்கிறது.
ஹேர் டிரஸர் ஹாரிஸ் என்பவரை போலீசார் கஸ்டடிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். தற்போது தர்மஜான் என்கிற நடிகரையும் புரொடக்சன் மானேஜரையும் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள் ,மொத்தம் 4 புள்ளிகள் கைதாகி இருக்கிறார்கள். இவர்களில் ஒருவருக்கு கொரானா .மருத்துவ மனையில் இருக்கிறார்.
4 பேர் கைதானத்தை தொடர்ந்து 3 மாடல்கள் (பெண்கள்.) போலீசில் புகார் செய்திருக்கிறார்கள் . வழக்கினை வாபஸ் வாங்க சொல்லி சிலர் பூர்ணாவை நிர்பந்தம் செய்கிறார்களாம் .போலீஸ் உயரதிகாரி பூங்குழலி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்.