தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக கடை திறந்து வைத்ததாக கூறி போலீசாரால் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்தியாவையே உலுக்கிய இச் சம்பவத்திற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குஷ்பூ ,ஜெயம்ரவி என தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும், வியாபாரிகளின் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் உள்பட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நடிகை நிவேதா பெத்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது,”ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம் என்னை பல நாட்கள் பாதிப்பு அடைய செய்தது. நான் இதுகுறித்து ஆழமாக யோசித்தேன். சரி, அது அமெரிக்கா.. நம்ம ஊரு எவ்வளவோ தேவலைன்னு நினைச்சேன். ஆனால் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோர்களுக்கு நடந்த கொடுமையை கேள்விப்பட்ட பின்னர், மனிதாபிமானம் எங்கே என்ற கேள்வி எழுகிறது. இந்த சம்பவம் உண்மையிலேயே என் முதுகெலும்பைக் சிலிர்த்திட வைத்துவிட்டது. ஏனெனில் தூத்துக்குடி நகரம் என்பது நான் ஒன்பது வருடங்கள் வாழ்ந்த இடம். ஜெயராஜ், ஃபென்னிக்ஸ் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். எனக் கூறியுள்ளார்.