கை வசம் இயக்குநர் ஹரியின் அருவா சூர்யா கையில் இருந்தாலும் குடும்ப பாங்கான படம் ஒன்று வேண்டும் அல்லவா?
அது அநேகமாக பாண்டிராஜின் படமாக இருக்கக்கூடும். தம்பி கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் கொடுத்தவராயிற்றே பாண்டியராஜ் ,சூர்யாவின் அடுத்து எதிர்பார்க்கக்கூடிய படம்தான் சூரரைப்போற்று.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று. படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதை 1977, 83, 1990 மற்றும் 2000 ஆகிய காலகட்டத்தில் நடக்கிறது.
.கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் இயல்பு நிலை திரும்பிய பின்னர் இந்தப் படம் திரைக்கு வர உள்ளது.