அரசியல் களம் அக்கினி நட்சத்திர வெயில் மாதிரி காஷ்மீரில் இருந்து கடைக்கோடி கன்னியாகுமரி வரை தகிக்கிறது.
400 ரூபா கொடுத்து கியாஸ் சிலிண்டர் வாங்கிய காலம் போய் விட்டது. பாஜக ஆட்சியில் 1000 ரூபா கொடுத்து அழ வேண்டியதாக இருக்கிறது என்று இல்லத்தரசிகள் கண்ணீர் வடித்து கணவன்மார்களின் பாக்கெட்டுகளை சுரண்டுகிறார்கள்.
கலவரம் வந்து விடுமோ என்கிற பயம் வேற.!
இவர்களுக்கிடையில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தடாலடியாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
ஏய் மக்கா..நம்ம புள்ளைகுட்டிகள்னு ஒவ்வொருத்தர் மீதும் கடன் சுமை இருக்குப்பே.! பொறக்கப்போற குழந்தையும் கடனாளியாத்தான் இருக்கும் என்று நம்ம தலைவிதி பற்றி சொல்கிறார்.
காதலர் தினமான நேற்று அவர் தனது டிவிட்டர் கணக்கில் வரவு வைத்துள்ள செய்தியை படியுங்கள்.திராவிட கழகங்களின் சுய ரூபம் இதுதான்வே என செவிட்டில் ஆராய்ந்திருக்கிறார்.