மாஸ்டர் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்கும் காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள்.
வழக்கம் போல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் முக்கியமான பார்வையாளர்கள் செல்போனில் படம் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள். அதை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி விடுகிறார்கள். அப்படி வைரல் ஆகி வரும் படம்தான் இங்கு பிரசுரம் ஆகி இருக்கிறது.