கமல் 60 எனும் பாராட்டு விழாவில் முன்னணி நாயகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு முறைப்படி அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன.
முன்னணி நடிகர்களில் அஜித்,விஜய் இந்த இருவரின் வருகையைப் பற்றித்தான் அதிகமாக பேசப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் இருக்கிறது.
இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக இருக்கிறார்கள்.
யார் பெரியவர் என்கிற போட்டி மனப்பான்மையும் இருக்கிறது.
இருவரது பட வசூலையும் அறிவித்து அவரை விட இவர்தான் வசூல் மன்னன் என சொல்லி ஒரு வித விரோத மனப்பான்மையை வளர்த்திருக்கிறார்கள்..சினிமாக்காரர்களின் சுயநலத்துக்கு இருவரது ரசிகர்களும் பலி ஆகி வருகிறார்கள் என்பதுதான் உண்மை.
இதனால்தான் இருவரையும் ஒன்றாக சேர்ந்து பார்ப்பதற்கு பொதுவான ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
அதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருப்பது கமல் 60 கொண்டாட்டம்.
ஆனால் அஜித் வரமாட்டார் என்பதாகவே சொல்கிறார்கள். அவரது தந்தையின் உடல் நலத்தைக் காரணமாக சொல்கிறார்கள்.
அஜித் வரவில்லை என்றால் விஜய் வருவது உறுதியாகிவிடும்.
ஆனால் இன்னும் இரண்டு நாள் சென்ற பின்னர்தான் எதுவுமே உறுதி.!