கவுதம் மேனன் இயக்கத்தில் வித்தியாசமான கதையுடன் தயாராகவிருந்த படம்தான் யோகன் அத்தியாயம் ஒன்று.
முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருந்த படம் . இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் சம்மதம் தெரிவித்திருந்தார். கதையைக் கேட்காமல் விஜய் ஒப்புக் கொண்டிருக்கமாட்டார். அவரை வைத்து டிசைன் பண்ணி போஸ்டர்கள் வந்தன.
ஆனால் என்ன நடந்ததோ விஜய் பின்வாங்கிவிட்டார்.இதனால் அந்த யோகன் படத் திட்டம் கை விடப்பட்டது.
தற்போது வேல்ஸ் படப்பிடிப்பு நிறுவனம் அந்த திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. ஐசரி கணேஷ் அதிகமான படங்களை எடுத்துக் கொண்டிருப்பவர். பெரிய நடிகர்கள்,பெரிய படம் என போகாமல் சிறிய அளவில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.அவர்தான் கவுதம் மேனனுக்கு கை கொடுத்திருக்கிறார்.
உண்மையில் கவுதம் மேனனுக்கு கைகொடுப்பதற்கு பலர் தயங்கும் நிலையில் ஐசரி கணேஷ் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.
அந்த படத்துக்குப் பெயர் ‘இமை போல் காக்க ‘.
இந்த படத்தில் நடிப்பவர் வருண். ஐசரி கணேஷின் சகோதரி மகன். பல படங்களில் நடித்திருப்பவர்.