மதுரை ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளிட்ட தெக்கத்தி சீமையில் ‘கான்சாயபு ‘ கிராமியப் பாடல் பிரபலமானது. ஆங்கிலேயரை எதிர்த்த வீரன். இந்த கான்சாயபுதான் பின்னாளில் மருதநாயகம் என அழைக்கப்பட்டார் என்பார்கள்.
வழக்கம்போல ஆராய்ச்சியாளர்கள் என்பவர்கள் மருதநாயகம் பற்றிய வாத- பிரதிவாதம் நடத்தினார்கள். கான் சாயபு பாடல் என்கிற புத்தகம் 40களில் மதுரை புதுமண்டபம் புத்தகக்கடைகளில் விற்கப்பட்டது. அந்தக் கால பெரிசுகள் கிருதா மீசையுடன் கான் சாயபு பற்றிய பாடல்களை ராகம் போட்டு பாடுவதைக் கேட்பதற்கு மக்கள் பெருமளவில் கூடுவார்கள். இந்த செய்தியை எழுதுகிறவரே நேரில் பார்த்த அனுபவசாலிதான்.!
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவனைப் பற்றிய திரைப்பட பூஜைக்கு இங்கிலாந்து பேரரசியை அழைக்க முடியுமா? சாத்தியமாகுமா?
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை என சொல்லக்கூட்டிய அந்த நாட்டின் பேரரசி வருவாரா?
வந்தார் எலிசபெத் மகாராணி. அழைத்தவர் மருதநாயகம் கமல்ஹாசன்.
அவர் அசல் ராணியாக வந்தார் .மருதநாயகமாக வேடமிட்டு கமல்ஹாசன் அழைத்து வந்தார்.
அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்டார். மிகப்பெரிய அளவில் பூஜை நடந்தது,
மகாராணி என்பதால் கடுமையான கட்டுப்பாடுகள். கியூன் எலிசபெத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,கமலா அம்மையார்,சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோரை கமல் அறிமுகப்படுத்தி வைத்தார். மனைவி சரிகாவுடன் மகள் ஸ்ருதி ஹாசனும் அந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு காட் சியும் படமாக்கப்பட்டது.
அதன் பின்னர் கமல் எழுதிய மருதநாயகம் கதை புத்தகம் பத்திரமாக வைக்கப்பட்டுவிட்டது.
அதற்கு பல காரணங்கள் உண்டு.
தற்போது மருதநாயகமாக உலகநாயகனால் நடிக்க முடியாது.
சீயான் விக்ரம் நடிக்கலாம். மருத நாயகம் படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாக கமல் அறிவித்ததற்கு காரணம் விக்ரம்தான் என கோலிவுட்டில் பேசி வருகிறார்கள். அது உண்மையாகவும் மாறலாம்.