அம்மாவின் கரு வறைக்குள் இருப்பதை ஸ்கேன் பண்ணி கண்டு பிடிப்பதை போல தற்போது ரகசியமாக நடக்கிற படப்பிடிப்புகளை திருட்டுத்தனமாக படம் எடுத்து அம்பலப்படுத்தி விடுகிறார்கள்.
ரஜினியின் தர்பார் படத்துக்கு இதே கதி.விஜய்யின் பி கில் படத்துக்கும் அதே கதைதான். தற்போது இயக்குநர் ஷங்கர் படமான இந்தியன்.2 படத்துக்கும் அதே கதிதான்.
போபாலில் நடைபெற்று வந்த படப்பிடிப்புப் படங்களை இணையத் தளங்களில் வெளியிட்டு விட்டார்கள்.
‘இந்தியன் 2’ கமல்ஹாசன் சுதந்திர போராட்ட வீரர் சேனாபதியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.போபாலில் உள்ள ராஜா போஜ் சேது என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. இந்த நட்சத்திர நடிகர் நேற்று முதல் 90 வயதானவராக படப்பிடிப்பு நடத்தி வருகிறார்,
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், வித்யுத் ஜாம்வால், டெல்லி கணேஷ், மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த 20 நாள் கால அட்டவணைக்குப் பிறகு, படத்தின் முதல் பகுதியின் முடிவில் ஒரு வெளிநாட்டில் கடைசியாகக் காணப்பட்ட கமல்ஹாசனின் ஃப்ளாஷ்பேக் பகுதியை படமாக்க குழு தைவான் மற்றும் ஐரோப்பாவுக்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போபாலில் எதிர்வரும் நாட்களில் படமாக்கப்படவுள்ள பிரமாண்டமான அதிரடி காட்சியின் ஒரு பகுதியாக 2000 க்கும் மேற்பட்ட ஜூனியர் கலைஞர்கள் இருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.