கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும்படத்தை எஸ். என். ராஜராஜன், தயாரிக்கிறார்.
இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமத்துரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கிறார். ஜி.வி.பிரகாசுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.