தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் சங்கம் , நடிகர் சங்கம் இரண்டும் பெற்றோரை பிரிந்த பிள்ளைகள் அரசு காப்பகத்தில் இருப்பதைப் போல தற்போது அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்கின்றன.
தேர்தல் நடத்த முடியாமல் தயாரிப்பாளர் சங்கம்!
தேர்தல் நடந்தும் முடிவு தெரியாமல் திகைப்பில் கிடக்கும் நடிகர் சங்கம்.
முந்திக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டும் பேட்டிகளைத் தட்டி விட்டுக் கொண்டும் இருந்த விஷால்,ஐசரி கணேஷ் இருவரும் தற்போது அவ்வளவாக அளந்து விடுவதில்லை.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தை சேர்ந்த கருணாஸ் பழனியில் இருந்து காட்டமான பேட்டி கொடுத்திருக்கிறார்.
“விஷால், ஐசரி கணேஷ் இருவரும் தங்களின் ஈகோவை விட வேண்டும். நடிகர் சங்கத்தின் முன்னேற்றம் குறித்து இருவரும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் .இல்லையேல் பொறுப்பில் இருந்து விலகிவிட வேண்டும்.
கட்டிடத் திறப்புக்கு பின்னால் இருந்து முட்டுக் கட்டை போட்டுக் கொண்டு வருகிறார் ஐசரி கணேஷ்,
ஆகவே இருவரும் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை என்றால் உடனே விலகி வழி விடுங்கள்!” என சொல்லி இருக்கிறார்.