Tuesday, December 10, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home INTERVIEW

ஹீரோயின் படங்களுக்கு ரகுமான் இசை அமைப்பதில்லையா?–ஜோதிகா.

admin by admin
August 5, 2019
in INTERVIEW
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஹீரோயின் சப்ஜெக்ட் படமா, கூப்பிடு ஜோ வை! கேரக்டர் வெயிட்டானதா,இல்ல லைட்டானதா ,எதுவா இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லணும் என்பது இவரது பாலிசி.

You might also like

“எனக்கு பாரதிராஜா வில்லன்!”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.

நடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா? ஆஷிமா பளீச்!

அப்பாவைப் போல வருவாரா மகன் ?

சமீபத்தில் வெளியான ராட்சசி படத்தைத் தொடர்ந்து  ஜாக்பாட் திரைப்படம் வெளியாகியுள்ளது. கணவர் சூர்யாதான் தயாரிப்பாளர்.

இப்படத்தை கல்யாண் இயக்கியுள்ளார்.

பெரும்பாலும் பத்திரிகையாளர்களை தவிர்த்து வந்தவர் இப்போதுதான் சில பத்திரிகையாளர்களை  சந்திக்கிறார். சலித்து எடுத்து அந்த பத்திரிகையாளர்களுடன் மட்டுமே உரையாடுகிறார். அப்படி சில பத்திரிகையாளர்களுடன் பேசியதுதான் இந்த பேட்டி.

நீங்க சூர்யா இரண்டு பேருமே சூட்டிங் போற சமயத்தில் உங்க குழந்தைகங்க யாரை மிஸ் பண்ணுவாங்க?

ரெண்டுபேரைமே மிஸ் பண்ணுவாங்க. பசங்களுக்கு சில விசயத்திற்கு அப்பா வேணும். சில விசயங்களுக்கு அம்மா வேணும்.

ஜாக்பாட் அக்‌ஷயா பற்றி..?

அகஷயா ரொம்ப போல்டான லேடி…இது காமெடி படம் போல தெரியும். ஆனா காமெடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. இந்தப்படத்தில் கல்யாண் சாரின் கான்செப்ட் எனக்கு ரொம்ப பிடித்தது. ஒரு பெரிய ஹீரோ படத்தில் அந்த  ஹீரோவுக்கு என்னவெல்லாம்  இருக்குமோ  அதெல்லாம் இப்படத்திலும் நிறைய இருக்கு. ஹீரோவுக்கு ஈக்குவலா ஒரு ஹீரோயினை திங் பண்ணி ரைட்டிங் பண்ண கல்யாணின்  அந்த தாட்ஸ் எனக்குப் பிடித்தது.

மேலும் கல்யாண் மேல எனக்குப்  பெரிய ஆச்சர்யம் என்னன்னா 24 டேய்ஸ்ல படத்தை முடிச்சிட்டார். ஸ்பாட்டுக்குப் போனா எல்லாப்பக்கமும் கேமரா வச்சிருப்பார்.

இப்போதுள்ள புதிய இயக்குநர்கள் எப்படி?

பிரில்லியண்டா யோசிக்கிறாங்க. நான் பொதுவா கதையை மூன்று மாதத்திற்கு  வாங்கி மனப்பாடம் பண்ணுவேன். இது பாலா சாரிடம் படித்த பாடம்.

உங்க பசங்களுக்கு என்ன ராட்சசி மாதிரி படங்கள்ல வர்ற ஜோதிகாவைப் பிடிக்குமா?

பசங்களுக்கு ஜாக்பாட் ஜோதிகாவை தான் பிடிக்குதுனு நினைக்கிறேன். என் படங்கள் பற்றி  என் பையனை விட பொண்ணு தான்  நிறைய பேசுவ

பயோபிக் படத்தில் நடிப்பீர்களா?

 இதுவரைக்கும்  ஐடியா இல்லை. மற்றபடி பல இளம் இயக்குநர்கள் எனக்காகவே சில கதைகளை எழுதுறாங்க அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. வொமன்ஸ் பத்தி இன்றைய இளைஞர்கள் ரைட்டப் பண்றது உண்மையாவே அமேசிங்கான விசயம்.

ஆனால் ஆடியன்ஸ் ஹீரோயின் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுக்க மாட்டேன்றாங்க. அதுதான் கஷ்டமா இருக்கு.

பெரிய ஹீரோக்கள் படம்னா போறாங்க. பெரிய ஹீரோக்கள் படங்கள்ல சண்டைக்காட்சிகளுக்கு 5 நாள் எடுத்துக்கிறாங்க. அந்தப்படங்களின் வியாபாரம் அப்படி.

அதே ஓபனிங் இருந்தால் ஹீரோயின் படங்களிலும் அது சாத்தியமாகும். அதேபோல் ஏ.ஆர் ரகுமான் பெண்கள் படத்திற்கும்  இசை  அமைக்கணும். அப்பதான் எல்லாருக்கும் அந்த தாட்ஸ் வரும்.

தயாரிப்பாளர்  சூர்யா எப்படி?

மத்த கம்பெனிகளை விட இங்க தாராளமா செலவு பண்ணுவாங்க. எனக்கு எங்க கம்பெனி செம்ம கம்போர்டா இருக்கும். நான் லீட் கேரக்டர்ல நடிச்ச படத்திற்கு முதன்முறையா 100 டான்ஸர் யூஸ் பண்ணிருக்காங்க. லீவு எடுத்துப்பேன். அந்த சவுகரியம்லாம் தயாரிப்பாளர் சூர்யாவிடம் தான் கிடைக்கும்.

ராட்சசி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் ஜாக்பாட்டில் உங்கள் சம்பளத்தை ஏற்றியுள்ளீர்கள்? சூர்யா சம்பளம் எப்படி கொடுத்தார்?

எனக்கு சம்பளம் அதிகம் தான். .எல்லா சம்பளமும் ஒரே வீட்டுக்குத் தானே வருது. நான் என்ன தனியாவா எடுக்கப் போறேன். 

ராட்சசி படத்திற்கு எதிர்ப்பு வரவேற்பு ரெண்டுமே வந்ததே?

நிறைய பேர் ட்ரீம் வாரியருக்கு கடிதம் அனுப்பினார்கள். அந்தக்கடிதங்களை நானும் பார்த்தேன். உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளீர்கள் என்று பலரும் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்ல..பயம் இருந்தா படமே நடிக்க மாட்டேனே?

ராட்சசிக்கு வந்த முக்கியமான பாராட்டு?

சிலர் ஈரோட்டுல ஒரு கவர்மெண்ட் ஸ்கூலுக்குப் பஸ். கொடுத்திருக்காங்க..சிலபேர் ஸ்கூலுக்குப் பண்ட் கொடுத்திருக்காங்க. இதுதான் பெரிய பாராட்டு.

படம் இயக்குவீங்களா?

நான் படம் இயக்க மாட்டேன். எனக்கு அந்தளவுக்கு நாலேஜ் இருக்கான்னு தெரியல..என் லட்சியம் என்னன்னா ஹீரோ படம் அளவுக்கு என் படம் வசூல் பண்ணணும். நூறு கோடி வசூல் பண்ணணும்

உங்களின் இந்த வெற்றிகரமான பயணத்திற்கு காரணம்?

என்னைவிட பெரிய நடிகைகள் இருந்தாலும்..சூர்யா இருந்ததால் தான் எனக்கு இப்படியான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. 36 வயதினிலே படம் பண்ணிய பிறகு இரண்டு வருசம் எனக்குப் படம் வரல. மறுபடியும் மகளிர் மட்டும் படத்தை சூர்யா தயாரிச்சார். என்னைப் பொறுத்தவரை நல்லபடம் பண்ணணும். ஏன்னா எனக்கும் குழந்தைகள் இருக்காங்க. நல்லபடங்கள் பண்ணுவேன்.
ஏன்னா எனக்கு 2டி இருக்கு..சூர்யா இருக்கார் நீங்க ஏன் சோசியல் மீடியாவுக்கு வர்றதில்ல?

அதில் எதாவது நெகட்டிவிட்டிஸ் பார்த்தோம்னா அது மனசைக் காயப்படுத்துது. அதான் என்கிறார் திருமதி ஜோதிகா சூர்யா.

 

 

Tags: சூர்யாஜாக்பாட்ஜோதிகா
Previous Post

"ரஜினியை கிண்டல் செய்ததை ஏற்க முடியாது!" -கமல்ஹாசன்.

Next Post

"வயசானால் லவ் ,கிஸ் ,ஹக் பண்ணக்கூடாதா?" சூப்பர் ஸ்டார் கேள்வி.!

admin

admin

Related Posts

“எனக்கு பாரதிராஜா வில்லன்!”-தரமணி  வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.
INTERVIEW

“எனக்கு பாரதிராஜா வில்லன்!”-தரமணி வசந்த் ரவி மனம் திறந்த பேட்டி.

by admin
October 28, 2019
நடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா? ஆஷிமா பளீச்!
INTERVIEW

நடிகைகள் கல்யாணத்தைத் தள்ளிப் போடலாமா? ஆஷிமா பளீச்!

by admin
July 19, 2019
அப்பாவைப் போல வருவாரா மகன் ?
INTERVIEW

அப்பாவைப் போல வருவாரா மகன் ?

by admin
March 18, 2019
நீயா-2 பட இயக்குனரிடம் 3 மணி நேரம் கதை கேட்ட ராய்லட்சுமி !
INTERVIEW

பிகினி பிடிக்கலியா. கண்ண மூடிட்டு போ!

by admin
March 11, 2019
நான் சென்னைக்கு வந்தால் நடிகைகள் வீட்டு இட்லி, சாம்பார் தான்!-ஜாக்கி ஷெராப் சொல்கிறார்.
INTERVIEW

நான் சென்னைக்கு வந்தால் நடிகைகள் வீட்டு இட்லி, சாம்பார் தான்!-ஜாக்கி ஷெராப் சொல்கிறார்.

by admin
January 30, 2019
Next Post
“வயசானால் லவ் ,கிஸ் ,ஹக் பண்ணக்கூடாதா?” சூப்பர் ஸ்டார் கேள்வி.!

"வயசானால் லவ் ,கிஸ் ,ஹக் பண்ணக்கூடாதா?" சூப்பர் ஸ்டார் கேள்வி.!

Latest Updates

இதோ இங்கேயும் ஒரு நித்தி…கைலாசா …சிஷ்யைகள்…..! விஜய் பட இயக்குநரின் ஆசை!
News

இதோ இங்கேயும் ஒரு நித்தி…கைலாசா …சிஷ்யைகள்…..! விஜய் பட இயக்குநரின் ஆசை!

by admin
December 9, 2019
0

வல்லமை வாய்ந்த பேரரசு இந்தியா என மார் தட்டிக் கொள்கிறோம். ஆனால் பெரிய பெரிய குற்றவாளிகள் எல்லாம் நாட்டை விட்டு சுலபமாக தப்பித்து வெளிநாடுகளில் போய் பதுங்கி...

Read more
என்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து? அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா!

என்னையும், என் குழந்தையையும் காயப்படுத்துவதை நிறுத்து? அருண் விஜய்யிடம் குமுறிய வனிதா!

December 9, 2019
சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

சர்வதேச திரைப்படவிழாவில் சாருஹாசனுக்கு   விருது!

December 9, 2019
ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

ப.சிதம்பரம்-வைரமுத்து சந்திப்பு.

December 8, 2019
யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

யாருக்கும் ஆதரவில்லை–உள்ளாட்சி தேர்தல் பற்றி ரஜினி …

December 8, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani