முதலில் ஸ்ரீதேவி பங்களா பட டீசர் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்.
அழகான குட்டிப் பொண்ணு அந்த நடிகையைப் பார்த்து சிரிக்கிது. அந்த நடிகை “நாந்தான் ஸ்ரீ தேவி” என்கிறாள்.
கட் பண்ணி கட் பண்ணி நடிகையின் உலகளாவிய பெருமைகளைக் காட்டுகிறார்கள். பாரின் காட்சிகள். மது அருந்துகிறாள் .புகைக்கிறாள். மனதில் எதோ ஒரு வித பயம். குளியல் அறையில் கதறி அழுகிறாள். முடிவில் பாத் டப்பில் இறந்து கிடக்கிறாள்.
டீசர் முடிகிறது.
இந்த படத்தில் ஸ்ரீதேவியாக நடித்திருப்பவர் பிரியா பிரகாஷ் வாரியர்..கண்சிமிட்டிய நடிகை.
யார் என்ன சொன்னார்களோ தெரியாது.,”தனக்கும் அந்தப்படத்துக்கும் வேற சம்பந்தம் எதுவும் கிடையாது”என அலறுகிறார்.
“தயாரிப்பாளர்,டைரக்டர் ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட படம். எனக்கு எந்த மாதிரியான கேரக்டர் கொடுத்தாங்களோ நடிச்சுக் கொடுத்திருக்கிறேன் ,யாரையும் ஹர்ட் பண்ணனும்னு நினைக்கல” என்கிறார்.
டீசரை பார்த்த போனிகபூர் வெகுண்டு எழுந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
ஸ்ரீ தேவி மரணத்துக்கு முன்னரே படத்தின் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.