என் இனிய, இயக்குனர் பெருமக்களே! இணை, துணை, உதவி இயக்குனர்களே,
நீங்கள் என் மீது வைத்திருக்கும் அளவிடமுடியாத பாசத்திற்கும், மரியாதைக்கும் வாழ்நாள் முழுவதும் பணியாற்றிட வேண்டும் என்பது ஆசை.
நடைபெற்ற பொதுக்குழுவில் ஏகமனதாக என்னை தலைவராக தேர்ந்து எடுத்ததற்காக சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்.
இருப்பினும் நான் ஏற்கனவே அறிவித்தபடி என் சொந்த பணிகளும் சூழ்நிலைகளும் என்னை தற்காலிகமாக ஒதுங்கியிருக்க சொல்லுகிறது .
எனக்கு மூளைச்சலவை செய்து என் மனதை திசை திருப்பியதாக யார் மேலேயோ பழியைப் போடுவது எனக்கு மன வேதனையை தருகிறது .
எந்த விஷயத்திலும் தைரியமாகவும் தெளிவாகவும் முடிவு எடுப்பவன் இந்த பாரதிராஜா. தற்காலிகமாக சற்று ஒதுங்கியிருக்கிறேன்.
வாழ்நாள் முழுவதும் நான் உங்களுடன் இருப்பேன் பணியாற்றுவேன் என உறுதி கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sent from my Samsung Galaxy smartphone.