விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் தல அஜித்குமார் சற்று பூசினால் போல் இருப்பார். அந்த கேரக்டர்களுக்கு பருமன் அவசியமாக இருந்தது.
ஆனால் இயக்குநர் வினோத்தின் அடுத்த படம் பக்கா ஆக்சன் படம். அதனால் உடம்பு குறைத்து இறுகினால் போல வலிமையான தோற்றம் வேண்டும் என்று இயக்குநர் விரும்பியதால் தற்போது அஜித்குமார் தினமும் ஜிம் போக ஆரம்பித்திருக்கிறார்,
போனிகபூரின் இந்த படத்துக்கு ஜிப்ரான் இசை என்கிறார்கள். நேர்கொண்ட பார்வை வெளியானதும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிடும்.