ஏ.ஆர்.முருகதாஸ்இயக்கத்தில் தற்போது ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இதில்ரஜினி போலீஸ் அதிகாரி மற்றும் சமூக சேவகராக நடித்து வருவதாக கூறப்படுகிறது . இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தெறி படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்த விஜயின் புகைப்படத்தை அப்படியே மார்பிங் செய்து, ரஜினி தலையை அதில் ஒட்ட வைத்து தர்பார் பட போஸ்டராக மாற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.ரசிகரின் குறும்புத்தனத்தால் அப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.