Thursday, December 12, 2019
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘கயல்’ திரைப்படவிமர்சனம் .

admin by admin
December 25, 2014
in Reviews
0
590
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

Kayal Movie First Look Posterபிரபு சாலமனின் மலையும் மலை சார்ந்த இடங்களின் பட வரிசையில் மைனா,கும்கி யை தொடர்ந்து’ கயல்’ மூன்றாவது படமாக அமைந்துள்ளது.
ஊர் ஊராக சென்று , சிறுசிறு வேலைகளை செய்து கிடைக்கும் பணத்தில் ஜாலியாக ஊரைச் சுற்றி வருகிறார்கள் நாயகனும் ( ஆரோன்) அவனது ( சாக்ரடிஸ் )நண்பனும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் ஊரைவிட்டு ஓடிவரும் ஒரு காதல் ஜோடியை அவர்கள் சந்திக்கின்றனர்.அவர்களுக்கு உதவி செய்கின்றனர் .ஆனால், இருவரும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிற அப் பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கிக் கொள்கிறார்கள் ,எங்கு ஓடினர் என்கிற விபரத்தை பெற அவர்களை கட்டி வைத்து உதைக்கிறது அந்த ஊர் ஜமீன் குடும்பம் .தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என அவர்கள் கெஞ்சியும் அந்த ஜமீன் கும்பல் நம்ப மறுக்கிறது. உண்மையை வரவழைப்பதற்காக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் கயல் என்கிற பெண்ணை தூதாக அனுப்புகிறார்கள்.ஹீரோவுக்கு கயலைப் பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது. இந்நிலையில் , ஓடிப்போன பெண் திரும்பக்கிடைக்க, அவனுக்கு உயிர்பிச்சைக் கொடுத்து அங்கிருந்து விரட்டி விடுகிறார்கள்.இதற்கிடையில் , அத்தனைப் பேர் முன்னிலையிலும் தன்னைக் காதலிப்பதாக சொன்னநாயகன் ஆரோன் மீது கயலுக்கும் காதல் வருகிறது காதலனைத் தேடிப்புறப்படுகிறாள் கயல். கயல் தன்னை தேடி அலைவதை தெரிந்து கொண்ட ஆரோனும் மறுபுறம் கயலைத் தேட, இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா ? என்பதே கயல் படத்தின் மீதிக்கதை!ஆரோனாக புதுமுகம் சந்திரன், கயலாக ஆனந்தி. துறுதுறு கண்களுடன், உதட்டுக்குக் கீழ் பெரிய மச்சம்என ஒரு கிராமத்து தேவதையாக நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறார். ஆனந்தி தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். தான் காதல் வயப்பட்டதை வெளிப்படுத்தும் இடத்தில் இவருக்கு நடிக்கவும் தெரியும் என்பதை நிருபித்து விடுகிறார்.நாயகன் சந்திரனின் நண்பராக வருபவர் நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியில் தோற்று விடுகிறார்.எரிச்சலே மிஞ்சுகிறது.
ஆர்த்தி அன்கோ காமெடி காட்சிகள் பல இடங்களில் வசனமே புரியாமல் போவதால் ‘தேமே’ என உட்கார வைத்து விடுகிறார்கள். சந்திரன் எதற்காக இப்படி ஊர் சுற்றுகிறார் என்பதை அவரது கண் தெரியாத அப்பா எழுதிய பிரையில் கடிதம் மூலம் விளக்குவது செம டச்சிங்காக உள்ளது.வில்லனாக வரும் யோகி தேவராஜ் கயலை பார்த்து ‘நாசமா போ என உறுமும் போது பலரின் கை தட்டல்களை அனாசயமாக அள்ளி விடுகிறார்..படத்தில் முக்கிய காட்சியாக கடைசி 15 நிமிடங்களை சொல்லலாம். கன்னியாகுமரி திரு வள்ளுவர் சிலை அருகில் உருவாகும் சுனாமியை மிகவும் தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக இயக்குனருக்கு பெரிய சபாஷ் போடலாம். . சுனாமியின் பின்னணிக்காக டால்பி அட்மாஸ் என்கிற புதிய இசை படு மிரட்டலாக இருக்கிறது. பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் இமானின் முத்தையா படங்களையே ஞாபகப் படுத்துகிறது. ஒரே ஒரு காட்சியில் பிரபு வருகிறார். போலிஸ்காரரிடம் வாழ்க்கைத் தத்துவம் பேசுகிறார். அவ்வளவே! மொத்தத்தில், மென்மையான காதலை தனது வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன், அதே சமயம் மைனாவும் கும்கியும் தொட்ட காதலின் ஆழமான உணர்வை கயல் தொடவில்லை என்பதே நிஜம்! முன்பாதியில் விழுந்த தொய்வை கடைசி 15 நிமிடங்கள் காப்பாற்றி விடுகிறது..கயல்விழி ஆனந்திக்காகவும் ,கண்களை குளிரவைக்கும் ஒளிப்பதிவுக்காகவும்  ,பிரபுசாலமனின் இயக்கத்திற்காக வும் ‘கயலை ‘ஒரு முறை பார்க்கலாம்./

You might also like

தனுசு ராசி நேயர்களே…! (விமர்சனம்.)

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..( விமர்சனம்.)

எனை நோக்கி பாயும் தோட்டா. ( விமர்சனம்.)

Previous Post

நான் மெர்சலாயிட்டேன் 'ஐ ' இந்தி பதிப்பு படப் பாடல்.

Next Post

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , 'குற்றம் கடிதல்' படத்திற்கு விருது !

admin

admin

Related Posts

தனுசு ராசி நேயர்களே…! (விமர்சனம்.)
Reviews

தனுசு ராசி நேயர்களே…! (விமர்சனம்.)

by admin
December 6, 2019
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..( விமர்சனம்.)
Reviews

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு..( விமர்சனம்.)

by admin
December 5, 2019
எனை நோக்கி பாயும் தோட்டா. ( விமர்சனம்.)
Reviews

எனை நோக்கி பாயும் தோட்டா. ( விமர்சனம்.)

by admin
November 30, 2019
மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். (விமர்சனம்.)
Reviews

மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். (விமர்சனம்.)

by admin
November 30, 2019
அடுத்த சாட்டை. (விமர்சனம் .)
Reviews

அடுத்த சாட்டை. (விமர்சனம் .)

by admin
November 30, 2019
Next Post
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ,  ‘குற்றம் கடிதல்’ படத்திற்கு விருது !

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் , 'குற்றம் கடிதல்' படத்திற்கு விருது !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest Updates

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.
News

துப்பாக்கி முனையில் ஷ்ரேயாவிடம் போலீஸ் விசாரணை.

by admin
December 11, 2019
0

சும்மா செவனேன்னு மும்பையில் முடங்கிக் கிடப்பதை விட அப்படியே லண்டனுக்குப்  பறந்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என நினைத்த  ஸ்ரேயாவுக்கு அப்படி ஒரு துயரம் காத்திருக்கும் என்பது...

Read more
செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

செந்தூர் வேலவா.! இந்த ஜோடிக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்பா!

December 11, 2019
தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

தலைவர் வண்டி ஆந்திராவில் ஸ்டார்ட் ஆகிடுச்சு,! கீர்த்தி ஆப்சென்ட்.

December 11, 2019
எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

எடப்பாடி என் முதல்வர் என்பது வெட்கக்கேடு –சித்தார்த்

December 11, 2019
தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

தமிழ் ஈழத் தமிழர்கள்,முஸ்லீம்கள் மீது ஏன் பாகுபாடு? மோடி அரசை கிழிக்கும் கமல்ஹாசன்

December 11, 2019

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • INTERVIEW
  • stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani