நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.தற்போது சூப்பர்ஸ்டார் ஹோலி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படங்களை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இன்று ஹோலி பண்டிகை மட்டுமின்றி லதா ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது .இந்தத் தகவலை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.